Enter your Email Address to subscribe to our newsletters
டெல்லி, 18 டிசம்பர் (H.S.)
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், விவசாயிகள்
வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவச உடையினை, டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது விவசாயிகளுக்கு மூச்சு திணறல், கண் பார்வை கோளாறு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து அதனை தடுப்பதற்காக மத்திய அரசு கவச உடை தயாரிக்க திட்டமிட்டது.
அதன்படி உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் பெங்களூரில் இயங்கும் பிரிக் - இன்ஸ்டெம் நிறுவனமும், மற்றொரு தனியார் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கான கவச உடையை தயாரித்துள்ளன.
இலகுவான இந்த உடையை அணிந்து வயலில் மருந்து தெளிப்பது எளிதாக இருக்கும் என தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் துவைத்து அணியும் வகையிலான இந்த பாதுகாப்பு தாய்க்கு விலை 4,000 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b